காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படும் - கர்நாடக மந்திரி பேட்டி


காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படும் - கர்நாடக மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 13 March 2020 8:16 PM GMT (Updated: 2020-03-14T01:46:49+05:30)

காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படும் என்று கர்நாடக மந்திரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. அணைகளில் தேவையான அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. அதனால் பெங்களூரு உள்பட மாநிலத்தில் எந்த பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

Next Story