கொரோனா வைரசுக்கு புதுமையான தீர்வுகள் வழங்க ‘விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் ஒன்றிணைய வேண்டும்’ - ராகுல் காந்தி அழைப்பு


கொரோனா வைரசுக்கு புதுமையான தீர்வுகள் வழங்க ‘விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் ஒன்றிணைய வேண்டும்’ - ராகுல் காந்தி அழைப்பு
x
தினத்தந்தி 18 April 2020 11:40 PM GMT (Updated: 18 April 2020 11:40 PM GMT)

கொரோனா வைரசுக்கு புதுமையான தீர்வுகள் வழங்க விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் யுத்தம் தொடர்பாக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட ஒரு பதிவில், “கொரோனா வைரசை தோற்கடிக்க தேவையான மிகப்பெரிய ஆயுதமே, தீவிரமான பரிசோதனைகள்தான்” என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஒரு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் இது ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. இந்த நெருக்கடியான தருணத்தில் நமது நாட்டின் விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும், தரவு வல் லுனர்களும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக புதுமையான தீர்வுகளை கண்டுபிடிக்க இணைந்து செயல்பட வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story