மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம்
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர், மன்மோகன் சிங், திடீர் உடல் நலக் குறைவால், நேற்று இரவு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள இருதய சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சமீபத்தில் அவர் உட்கொண்ட மருந்து எதிர்வினையாற்றியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மன்மோகன் சிங் தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story