இந்தியாவில் ஒரே நாளில் 273 பேரின் உயிரை பறித்த கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 273 பேர் உயிரிழந்தனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,26,770 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்களாக மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளன. இதில் மராட்டியத்தில் மட்டும் 77,793 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 27,256 பேருக்கும், டெல்லியில் 25,004 பேருக்கும், குஜராத்தில் 18,584 பேருக்கும், ராஜஸ்தானில் 9,862 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில தினங்களாக பாதிகப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,588 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மராட்டிய மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 273 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6,348 ஆக அதிகரித்துள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனா 2,710 பேரின் உயிரை காவு வாங்கி இருக்கிறது. மேற்கண்ட இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story