டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு - மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம்
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு 38,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14,945 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,271 ஆக உள்ளது.
இந்நிலையில் மேலும் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே மத்திய அரசு சார்பாக டெல்லிக்கு 500 ரெயில் பெட்டிகள் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் கூடுதலாக 8000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த முடியும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக பரிசோதனை முறைகளை எளிதாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக நோய் கட்டுப்பாடு பகுதியில் வசிக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு 38,958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14,945 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,271 ஆக உள்ளது.
இந்நிலையில் மேலும் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே மத்திய அரசு சார்பாக டெல்லிக்கு 500 ரெயில் பெட்டிகள் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் கூடுதலாக 8000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த முடியும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த, அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லி மாநில தலைவர் அனில் குமார் சவுத்ரி, ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story