புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரிக்கை


புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2020 5:56 AM GMT (Updated: 23 Aug 2020 5:56 AM GMT)

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி, 

மத்திய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில பள்ளிக்கல்வி செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. 

இதன்படி புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை முதல் (24/8/2020) வரும் 31-ம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் http://Innovateindia.mygov.in/nep2020 என்ற இணையதள முகவரியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த இணையதள முகவரியில் சென்று தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story