மராட்டியத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதி


மராட்டியத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 19 Sep 2020 1:33 AM GMT (Updated: 19 Sep 2020 1:33 AM GMT)

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்களில் ஒருவரான வினய் சகஸ்ரபுட்டே, கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் முடிவு வந்ததால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார். ஆனால் நேற்று இரவு அவருக்கு தலைவலியுடன் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் மீண்டும் பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுபற்றி டுவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், “எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் டாக்டர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும்” என்று கூறி உள்ளார். இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை மேலும் ஒன்று அதிகரித்துள்ளது.

Next Story