மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? 13 இடங்களில் முன்னிலை


மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? 13 இடங்களில் முன்னிலை
x
தினத்தந்தி 10 Nov 2020 4:52 AM GMT (Updated: 10 Nov 2020 4:56 AM GMT)

இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களில் வெற்றி பெற்றால்தான் மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகானின் பா.ஜனதா ஆட்சி தொடரும்.

போபால்,

 நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

இதில் முக்கியமாக மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் இருந்து விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நடந்த இடைத்தேர்தலாகும். அவர்கள் விலகியதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அமைந்திருந்தது.

இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களில் வெற்றி பெற்றால்தான் மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகானின் பா.ஜனதா ஆட்சி தொடரும். எனவே பீகார் தேர்தலை போலவே மத்திய பிரதேச இடைத்தேர்தல் முடிவுகளும், நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 13 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.  இதனால், பாஜக ஆட்சியை தக்க வைக்கும் எனத்தெரிகிறது. 

Next Story