மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர்களின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: யோகி ஆதித்யநாத் கண்டனம்
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர்களின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யோகி ஆதித்யநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் வரும் 2021ம் ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
மேற்கு வங்காளத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா சென்றார்.
ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கல்வீசி தாக்கினர். இந்த கல்வீச்சு சம்பவத்தில் பா.ஜ.க பொதுச்செயலாளர் விஜய் வர்கியா காயமடைந்தார்.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர்களின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உத்திரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மேற்கு வங்காளத்தில் பாஜக தலைவர் ஜே பி நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீதான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். சாமானியர்களுக்கு அரசு பாதுகாப்பாக இல்லை என்பது தெளிவாகிறது. இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமையின் மோசமான நிலையை பிரதிபலிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் இத்தகைய கோழைத்தனமான செயல்களை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story