ராமர் கோவிலுக்கு நன்கொடை வசூலிப்பதை பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ் தொழிலாக்கி விட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ராமர் கோவிலுக்கு நன்கொடை வசூலிப்பதை பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொழிலாக்கிவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
தொழிலாக்கி விட்டது
ராமஜென்ம பூமி அறக்கட்டளை ராமர் கோவில் கட்டுவதற்காக ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.18.5 கோடிக்கு வாங்கியிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் குற்றம்சாட்டி இருந்தார். இந்த விவகாரத்தில் கோவில்
அறக்கட்டளை மற்றும் ஆர்.எஸ்.எஸ். விளக்கம் அளிக்க வேண்டும் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். ராமர் கோவில் பெயரில் நன்கொடை வசூலிப்பதை தொழிலாக்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
பொது மக்களுக்கு எச்சரிக்கை
இதுகுறித்து அந்த கட்சியின் மாநில செய்திதொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், ‘‘ராமர் கோவிலின் பெயரை வைத்து பணம் வசூலிப்பதை பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொழிலாக்கிவிட்டது. அவர்கள் ஏற்கனவே பணம் வசூலித்தார்கள். ஆனால் எந்த கணக்கும் கொடுக்கவில்லை" என கூறியுள்ளார். இதேபோல அவர் கடந்த ஜனவரி 30-ந் தேதி போட்ட டுவிட்டர் பதிவை மீண்டும் போட்டுள்ளார். அந்த பதிவில், ‘‘பொதுமக்கள் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மூலமாக கொடுக்கும் நன்கொடை கட்சி நிதிக்கோ அல்லது சிலரது வீட்டுக்கு செல்லலாம். எனவே நீங்கள் நம்பிக்கையோடு கொடுக்கும் நன்கொடை ராமர் கோவில் மேம்பாடு, அறக்கட்டளைக்கு செல்வதை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்’’ என கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story