கர்நாடகத்தில் இன்று 5,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கர்நாடகத்தில் இன்று 5,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 17 Jun 2021 2:56 PM GMT (Updated: 2021-06-17T20:26:30+05:30)

கர்நாடகத்தில் தற்போது 1,46,726 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 5,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,90,338 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 138 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,434 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 10,685 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,10,157 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் தற்போது 1,46,726 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story