அரியானாவில் முதல்-மந்திரிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jun 2021 9:10 PM GMT (Updated: 20 Jun 2021 9:33 PM GMT)

அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

பஞ்ச்குலா, 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் நேற்று பஞ்ச்குலாவில் அமைக்கப்பட்டிருந்த சுகாதார மையம் ஒன்றை திறந்து வைத்தார்.

முன்னதாக அந்த பகுதிக்கு அவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விவசாயிகள் சிலர் கருப்புக்கொடியுடன் அங்கு திரண்டனர். முதல்-மந்திரிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவதற்காக வந்திருந்த அவர்களை போலீசார் கலைந்து போக வலியுறுத்தினர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த விவசாயிகள் அங்கேயே சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அந்த விவசாயிகள் போலீசார் குண்டு்கட்டாக வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். அமைதியான போராட்டம் நடத்த முயன்ற தங்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதாக பின்னர் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Next Story