ஒடிசா மாநிலத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 July 2021 8:22 PM GMT (Updated: 15 July 2021 8:22 PM GMT)

ஒடிசா மாநிலத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

புவனேஸ்வர், 

கொரோனா பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. 3-வது முறையாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதனையடுத்து ஊரடங்கை ஆகஸ்டு 1-ந்தேதி வரை நீட்டித்து மாநில தலைமைச்செயலாளர் மொகபத்ரா நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தொற்று பரவலை அடிப்படையாக கொண்டு 2 பிரிவாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், அதிகம் உள்ள 10 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சலூன் கடைகளும், அழகுநிலையங்களும் திறக்க ஒடிசா மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அதேசமயம் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடர்கிறது.

Next Story