ஜம்மு காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 பேர் பலி


ஜம்மு காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 பேர் பலி
x
தினத்தந்தி 24 Oct 2021 3:56 AM GMT (Updated: 24 Oct 2021 5:19 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

காஷ்மீர்,

ஜம்மு & காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளத்தாக்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு உருவானதால் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன..

மத்திய மற்றும் தெற்கு காஷ்மீரின் சில பகுதிகளில்  தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது.  ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் பலத்த மழை பெய்து வருவதால் பெரும்பாலான ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

புல்வாமா மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்ததால், அங்குள்ள டிரால் பகுதியில் உள்ள நூர்போராவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏராளமான ஆப்பிள் மரங்கள் சேதமடைந்துள்ளது. சோபியான் மற்றும் குல்காம் ஆகிய மாவட்டங்களில் 50 சதவீத ஆப்பிள் பழங்கள் இன்னும் அறுவடை செய்யப்படவில்லை. ஆப்பிள் அறுவடை செய்ய முடியாததால் பழங்கள் மரத்திலேயே வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீர், செனாப் பள்ளத்தாக்கு, பிரபாஞ்சல், ரியாசி, பூஞ்ச், ரஜோரி போன்ற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பனியின் அளவானது  படிப்படியாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story