தேசிய செய்திகள்

‘இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ - பிபின் ராவத்தின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு + "||" + China opposes CDS Rawat's remark calling it India's biggest security threat

‘இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ - பிபின் ராவத்தின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு

‘இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ - பிபின் ராவத்தின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு
இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பிபின் ராவத்தின் தெரிவித்துள்ள கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

லடாக் மோதலை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே எழுந்துள்ள பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. எல்லையில் இருதரப்பும் படைகளை முற்றிலும் வாபஸ் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இந்த நிலையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக சீனா இருப்பதாக இந்திய முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் வூ கியான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சீனா ராணுவ அச்சுறுத்தல் என்று அழைக்கப்படுவதை இந்திய அதிகாரிகள் எந்த காரணமும் இன்றி யூகிக்கிறார்கள். சீனாவும் இந்தியாவும் ஒருவருக்கொருவர் அச்சுறுத்தலாக இல்லை என்ற இரு நாடுகளின் தலைவர்களின் வழிகாட்டுதலை இது மீறும் செயல் ஆகும்.’ என கூறினார்.