ஜாவித் புயல் எதிரொலி - இரண்டு ரெயில்கள் ரத்து!
ஜாவித் புயல் சின்னம் காரணமாக இரண்டு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி - திப்ருகர் (15905) வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 4.55 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் - சாலிமர் (22641) வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய இவ்விரு ரெயில்களும் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
ஜாவித் புயல் சின்னம் காரணமாக இவ்விரு ரெயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அதன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story