சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் - ராகுல் காந்தி இன்று சந்திப்பு


சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் - ராகுல் காந்தி இன்று சந்திப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 2:40 PM IST (Updated: 7 Dec 2021 2:40 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று சந்திக்க உள்ளார்.

புதுடெல்லி,

தேசிய அரசியலில் பாஜவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக திரிணாமுல் காங்கிரசை முன்னிறுத்தும் முயற்சியில் மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார். இதற்காக தேசிய அரசியலில் தனது கட்சியின் தளத்தை விரிவுபடுத்தும் வேலையிலும், காங்கிரசுக்கு மாற்று சக்தியாக தங்களை முன்னிறுத்தும் வேலையிலும் மம்தா பானர்ஜி இறங்கியுள்ளார். 

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மம்தா பானர்ஜியின் இந்த முயற்சி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று சந்திக்க உள்ளார். டெல்லியில் நடைபெற உள்ள இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா-காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அம்மாநில முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story