சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவி நீட்டிப்பு மசோதா: மக்களவையில் நிறைவேறியது


சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவி நீட்டிப்பு மசோதா: மக்களவையில் நிறைவேறியது
x
தினத்தந்தி 10 Dec 2021 4:31 AM IST (Updated: 10 Dec 2021 4:31 AM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளுக்கிடையே சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவி நீட்டிப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது.

புதுடெல்லி, 

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான 2 அவசர சட்டங்களை மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்தது. இந்தநிலையில், அவற்றுக்கு மாற்றாக நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 2 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.

நேற்று மக்களவையில் இந்த மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது பேசிய மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங், இந்த பதவி நீட்டிப்பால் விசாரணை அமைப்புகள் பலப்படும் என்று கூறினார்.

ஆனால், இதற்கு என்ன அவசரம்? என்றும், இது விசாரணை அமைப்புகளின் சுதந்திரத்தை பறித்து விடும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story