பிரதமர் மோடி நாளை இமாச்சல பிரதேசம் பயணம்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Dec 2021 3:16 PM IST (Updated: 26 Dec 2021 3:16 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் நாளை இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி நாளை இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். மேலும் நாளை இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார்.

இதனையடுத்து ரூ.11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ரேணுகாஜி அணை திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட  செய்திக்குறிப்பில், இமாச்சல பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார். சுமார் ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் இப்பகுதியில் முதலீட்டுக்கு இந்த சந்திப்பு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள வளங்களின் பயன்படுத்தப்படாத திறனை முழுமையாகப் பயன்படுத்துவதில் பிரதமர் மோடி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இது சம்பந்தமாக, இமயமலைப் பகுதியில் உள்ள நீர்மின் திறனை உகந்ததாகப் பயன்படுத்துவது ஒரு படியாகும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story