சத்தீஸ்கர்: சுகாதார மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Jan 2022 7:10 PM GMT (Updated: 2022-01-03T00:40:07+05:30)

சத்திஸ்கர் மாநில சுகாதார மந்திரியான சிங் தியோவுக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராய்ப்பூர்,

சத்திஸ்கர் மாநில சுகாதார மந்திரியான சிங் தியோவுக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தன்னுடைய டுவீட்டரில் கூறுகையில், 

"எனக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் இருந்ததால், பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்கு தொற்று இருப்பது உறுதியானது. நான் தற்போது நலமுடன் உள்ளேன். வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை எடுத்து வருகிறேன். 

கடந்த 14 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளவும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவும் நான் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எற்கெனவே அவர் கடந்த மார்ச் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story