பஞ்சாப் சட்டசபை தேர்தல்; ரூ.40.31 கோடி மதிப்பிலான சட்டவிரோத பொருட்கள் பறிமுதல்

பஞ்சாபில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் ரூ.40.31 கோடி மதிப்பிலான சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
சண்டிகார்,
பஞ்சாபில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும்.
இதற்காக தனி பறக்கும் படை செயல்பாட்டில் இருக்கும். இந்நிலையில், ரூ.81 லட்சம் மதிப்பிலான மதுவகைகள், ரூ.14 லட்சம் பணம் மற்றும் ரூ.38.93 கோடி மதிப்பிலான பொருட்கள் உள்ளிட்டவற்றை இந்த படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி ராஜூ உறுதிப்படுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story