உக்ரைனில் இருந்து 40 மருத்துவ மாணவர்கள் இந்தியா திரும்புகின்றனர்..!
உக்ரைனில் இருந்து 40 மருத்துவ மாணவர்கள் போலந்து வழியாக இந்தியா திரும்பி வருகின்றனர்.
புதுடெல்லி,
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று போர் தொடுத்தது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் இன்று 2-வது நாளாகவும் நீடித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் இருந்து 40 மருத்துவ மாணவர்கள் போலந்து வழியாக இந்தியா திரும்பி வருகின்றனர்.
அவர்கள் உக்ரைன் - போலந்து எல்லை அருகே 8 கி.மீ. தூரத்திற்கு முன் இறக்கி விடப்பட்டனர். அங்கிருந்து போலந்து நோக்கி மருத்துவ மாணவர்கள் நடந்து செல்கின்றனர். உக்ரைனில் இருந்து போலந்துக்கு வரும் இந்தியர்கள் ஷெஹினி - மெடிகா எல்லையை பயன்படுத்த போலந்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story