2024 மக்களவை தேர்தல்: தமிழக அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை


2024 மக்களவை தேர்தல்: தமிழக அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
x

டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

டெல்லி,

2024 மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இது குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், உபகரணங்கள், வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.



Next Story