இந்தியாவில் வெளிநாட்டவர்கள் இளநிலை, முதுநிலை பயில கூடுதல் இடங்கள், நுழைவு தேர்வு கிடையாது - யுஜிசி
இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்களில் வெளிநாட்டவர்கள் பயில 25 சதவிகித இடம் கூடுதலாக ஒதுக்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது.
டெல்லி,
இந்தியாவின் இளநிலை, முதுநிலை படிப்புகளை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்வது தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், இளநிலை, முதுநிலை படிப்புகளில் இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்களில் வெளிநாட்டவர்கள் பயில 25 சதவிகித இடம் கூடுதலாக ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள இடங்களையும் சேர்த்து கூடுதலாக 25 சதவிகித இடம் ஒதுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் இளநிலை, முதுநிலை பயில நுழைவு தேர்வு எதுவும் எழுத வேண்டியதில்லை நேரடியாக விண்ணப்பிக்கலாம் என யூஜிசி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 25 சதவிகித இடத்தில் காலி இடங்கள் இருந்தாலும் அதில் வெளிநாட்டு மாணவர்களை தவிர வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story