உத்தரப்பிரதேசம்: கார் மீது பஸ் மோதி விபத்து - 4 பேர் பலி


உத்தரப்பிரதேசம்: கார் மீது பஸ் மோதி விபத்து - 4 பேர் பலி
x

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூரில் கார் மீது பஸ் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

பிஜ்னோர்,

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் கார் மீது பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் ரஞ்சன் சிங் கூறுகையில், "மண்டவாலி பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. அதிகாலை 4 மணியளவில் ஹரித்வார் பகுதியில் இருந்து வந்த கார் மீது ரோஹில்கண்ட் டிப்போ பேருந்து ஒன்று மோதியது.

காரில் வந்த ராஜேபூர் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த அமித் (வயது 26), அசோக் (வயது 20), பவன் (வயது 27), தர்மேந்திரா (வயது 25), சுமித் (வயது 27), மன்ஜீத் (வயது 21) சச்சிதானந்த் (வயது 20) மற்றும் ரோஹித் (வயது 26) ஆகியோர் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் தர்மேந்திரா, மன்ஜீத், சச்சிதானந்த், அசோக் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்" என்று கூறினார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story