தெலுங்கானாவில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 40 பேர் காயம்


தெலுங்கானாவில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 40 பேர் காயம்
x

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 40 பேர் காயமடைந்தனர்.

நிஜாமாபாத்,

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதியதில் 40 பேர் காயமடைந்தனர். ஆர்மூர் நகரில் உள்ள பெர்கிட் கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.

நாக்பூரில் இருந்து ராஜ்தானி டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து ஒன்று ஐதராபாத் நோக்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. டிரைவர் தூக்கத்திலிருந்ததாகவும் அவரது கவனக்குறைவால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 40 பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 15 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story