வீடு இடிந்து விழுந்து 45 ஆடுகள் செத்தன


வீடு இடிந்து விழுந்து 45 ஆடுகள் செத்தன
x

மண்டியா அருகே கனமழையால் வீடு இடிந்து நாற்பத்து ஐந்து ஆடுகள் பரிதாபமாக செத்தன.

மண்டியா:


தொடர் கனமழைக்கு மண்டியா அருகே உம்மதஹள்ளி கிராமத்தை சேர்ந்த யசோதம்மா என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யசோதம்மா மற்றும் குடும்பத்தினர் உயிர் தப்பினர். ஆனால் யசோதம்மா வீட்டு அருகில் கட்டிவைத்திருந்த 45-க்கும் மேற்பட்ட ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி செத்தன. இதனால் யசோதம்மா மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.


ஆடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில், அந்த ஆடுகள் உயிரிழந்துவிட்டது. எனவே பலியான ஆடுகளுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டியா அருகே புடனூர் ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

1 More update

Next Story