ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு !
கவுகிலிருந்து டன்னு பரோலுக்கு சென்ற கார் அங்குள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஸ்ரீநகர்,
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கடுவா மாவட்டத்தில் கவுகிலிருந்து டன்னு பரோலுக்கு கார் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது சிலா என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே காரில் இருந்த நபர்களில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 5 ஆக உள்ளது. இவர்களைத்தவிர, மொத்தம் 15 பேர் பலத்த காயமடைந்தனர்.
இவர்களை மீட்டு பில்லவரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், சம்பவ குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்தில் பலியானவர்கள் பாண்டு, ஹன்ஸ் ராஜ், அஜீத் சிங், அம்ரூ மற்றும் காகு ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story