உத்தரகாண்ட்: மினி வேன் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி, 3 பேர் படுகாயம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
நியூ டெஹ்ரி,
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில் மினி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் பில்கியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தின் பிலங்கனா பகுதியில் உள்ள கன்சாலி-துட்டு சாலையில் போகர் அருகே பிற்பகல் 2:45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், வாகனம் சவுத் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கன்சாலி காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் சவுத் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் கானப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்துபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story