பஞ்சாயத்துகளை வலுப்படுத்த நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.895 கோடி நிதி - மத்திய அரசு தகவல்


பஞ்சாயத்துகளை வலுப்படுத்த நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.895 கோடி நிதி - மத்திய அரசு தகவல்
x

தமிழ்நாட்டுக்கு 2019-2020-ம் ஆண்டு முதல் ரூ.9,609 கோடி பஞ்சாயத்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மாநிலம் வாரியாக பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்களை மத்திய பஞ்சாயத்துராஜ் இணை மந்திரி கபில் மொரேஷ்வர் பாட்டீல் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

அதன்படி தமிழ்நாட்டுக்கு கடந்த 2019-2020-ம் ஆண்டு முதல் ரூ.9,609.376 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 14 மற்றும் 15-வது நிதி ஆணையங்களில் பல்வேறு மேம்பாட்டுப்பணிகளுக்காக பஞ்சாயத்துகளுக்கும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ராஷ்டிரிய கிராம சுவராஜ் இயக்கத்தின் கீழ் மாநிலங்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் திறன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு ரூ.127.49 கோடி கிடைத்துள்ளது. மேலும் 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த ரூ.895 கோடி நிதியும் வழங்கப்பட்டு உள்ளதாக மந்திரி தெரிவித்து உள்ளார்.


Next Story