சத்தீஷ்காரின் புதிய முதல்-மந்திரி யார் ? - இன்று பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க ஆட்சி அமைக்கவுள்ளது.
ராய்பூர்,
சத்தீஷ்கார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இதில் பா.ஜ.க 54 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அங்கு பா.ஜ.க ஆட்சி அமைக்க உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 35 இடங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி இன்னும் தனது முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கவில்லை. புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்க மத்திய மந்திரிகள் அர்ஜுன் முண்டா மற்றும் சர்பானந்தா சோனோவால் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் ஆகியோரை கட்சி மேலிடம் வெள்ளிக்கிழமை நியமித்தது.
இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ க்களின் கூட்டம் சத்தீஷ்காரில் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.