ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை


ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை
x

கோப்புப்படம் 

மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

கோட்டா,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐ.ஐ.டி - ஜே.இ.இ நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் சமீப மாதங்களாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், மேற்குவங்காளம் மாநிலத்தை சேர்ந்த பவுரீத் உசைன் (வயது 20) என்ற வாலிபர் கோட்டா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் கடந்த ஓர் ஆண்டாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். நேற்று முன்தினம் அவர் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை கோட்டா நகரில், பயிற்சி மாணவர்கள் 25 பேர் இப்படி தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story