கார் மீது மற்றொரு கார் மோதி தீப்பிடித்தது; முன்னாள் ராணுவ வீரர் பலி


கார் மீது மற்றொரு கார் மோதி தீப்பிடித்தது; முன்னாள் ராணுவ வீரர் பலி
x

மைசூரு-பெங்களூரு அதிவிரைவுச்சாலையில் கார் மீது மற்ெறாரு கார் மோதி தீப்பிடித்தது. இதில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார். மேலும் அவரது நண்பர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மண்டியா:

மைசூரு-பெங்களூரு அதிவிரைவுச்சாலையில் கார் மீது மற்ெறாரு கார் மோதி தீப்பிடித்தது. இதில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார். மேலும் அவரது நண்பர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கார் கவிழ்ந்து தீப்பிடித்தது

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா நகுவினஹள்ளி கிராமத்தில் மைசூரு-பெங்களூரு அதிவிரைவுச்சாலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் கார் மீது மற்றொரு கார் மோதி கவிழ்ந்ததுடன் தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் கார் கவிழ்ந்து முற்றிலும் உருக்குலைந்தது. அந்த காரில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். கவிழ்ந்த சில நிமிடத்தில் கார் தீப்பிடித்தது. உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் காயமடைந்த 4 பேரையும் மீட்டனர். மேலும் பலியானவரின் உடலையும் காரில் இருந்து அப்புறப்படுத்தி சாலையில் வைத்திருந்தனர்.

4 பேர் படுகாயம்

இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கப்பட்டணா புறநகர் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர். அவர்கள் காரில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

காயமடைந்த 4 பேரையும் மீட்டு போலீசார் மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் ராணுவ வீரர்

போலீஸ் விசாரணையில், பலியானவர் பெங்களூரு புறநகர் ஆனேக்கல்லை சேர்ந்த கிஷோர் பாபு (வயது 45) என்பதும், இவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரியவந்து.

கிஷோர்பாபு தனது நண்பர்கள் 4 பேருடன் காரில் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு சென்றதும், அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீது மோதி கவிழ்ந்ததுடன் தீப்பிடித்ததும், விபத்தில் கிஷோர் பாபு பலியானதும், அவரது நண்பர்கள் 4 பேர் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக மற்றொரு காரில் வந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.


Next Story