அமர்நாத் யாத்திரை: மற்றொரு குழு யாத்ரீகர்கள் புறப்பட்டனர்


அமர்நாத் யாத்திரை: மற்றொரு குழு யாத்ரீகர்கள் புறப்பட்டனர்
x

அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி நிறைவடைகிறது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த மாதம் 29ம் தேதி (ஜூன்) தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி (ஆகஸ்ட்) நிறைவடைகிறது. நாள்தோறும் குழுக்களாக பிரித்து பக்தர்கள் குகை கோவிலுக்கு சென்று வருகின்றனர். பனி லிங்கத்தை 19 நாட்களில் 3.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 4,383 யாத்ரீகர்கள் அடங்கிய புதிய குழு இன்று அதிகாலை ஜம்முவில் உள்ள அடிப்படை முகாமில் இருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலை 3.15 மணிக்கு பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து 157 வாகனங்களில் புறப்பட்டனர். இதில் 1,086 பெண்கள் மற்றும் 8 குழந்தைகளை உள்ளடக்கிய 21வது யாத்ரீகர்கள் குழு ஆகும்.

2,682 யாத்ரீகர்கள் அனந்த்நாத் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய 48 கிலோ மீட்டர் பாதையில் இருந்து யாத்திரை மேற்கொள்வதற்காக பஹல்காம் சென்றடையும் போது, மீதமுள்ள 1,701 யாத்ரீகர்கள் கந்தர்பால் மாவட்டத்தில் குறுகிய செங்குத்தான 14 கிலோ மீட்டர் பால்டால் வழியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

1 More update

Next Story