எதிர்காலத்தை கணித்து கூறுவதாக இளம்பெண் பாலியல் பலாத்காரம்: ஜோதிடர் கைது


எதிர்காலத்தை கணித்து கூறுவதாக இளம்பெண் பாலியல் பலாத்காரம்: ஜோதிடர் கைது
x
தினத்தந்தி 10 May 2024 8:58 AM IST (Updated: 10 May 2024 9:50 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஜோதிடர் அதனை செல்போனில் புகைப்படம் எடுத்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மிராரோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வேலை தேடிவந்தார். அப்போது, ஆன்லைனில் ஒரு விளம்பரத்தை கண்டார். அதில், ஜோதிடர் வினோத் பண்டித்(வயது 55) என்பவர் எதிர்காலத்தை கணித்து தெரிவிப்பதாக கூறி இருந்தார். இதனை நம்பிய அப்பெண் அவரை தொடர்பு கொண்டார். நாளடைவில் ஜோதிடர் வினோத் பண்டித் பெண்ணை நம்ப வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் ஒரு வருடம் கழித்து அப்பெண்ணின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் மீ்ண்டும் ஜோதிடரை அப்பெண் தொடர்பு கொண்டார். அப்போதும், அவர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தனது செல்போனில் ஆபாச புகைப்படத்தை பதிவு செய்தார். பின்னர் ஆபாச புகைப்படத்தை காண்பித்து பெண்ணை மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதனால் மனஉளைச்சல் அடைந்த பெண் இந்த சம்பவம் குறித்து நயாநகர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிடர் வினோத் பண்டித்தை கைது செய்தனர். பின்னர் போலீசார், அவரை தானே கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story