உ.பி.யில் கொடூரம்; நிலத்தை தராததால் தாயின் தலையை வெட்டிக் கொன்ற மகன்
விவசாயத்திற்கு பயன்படும் கத்தியைக் கொண்டு தனது தாயின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் அருகே மேஜாபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் பாசி(35). மதுப்பழக்கத்திற்கு அடிமையானவரான தினேஷ், தனது தாய் கமலா தேவியிடம் நிலம் ஒன்றை தன் பெயருக்கு மாற்றித் தரக் கோரி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கமலா தேவி நிலத்தை தினேஷ் பெயருக்கு மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், விவசாயத்திற்கு பயன்படும் கத்தியைக் கொண்டு தனது தாயின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தினேஷ் தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கமலா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தலைமறைவான தினேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story