குஜராத்தில் லாரி மீது ஆட்டோ மோதி விபத்து - 7 பேர் பலி


குஜராத்தில் லாரி மீது ஆட்டோ மோதி விபத்து - 7 பேர் பலி
x

குஜராத்தில் லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்,

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் அடுத்த தர்ஜிபூரா பகுதியில் ஆட்டோ மற்றும் கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 7 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குஜராத் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "குஜராத், வதோதரா மாவட்டத்தில் நடந்த விபத்து குறித்து அறிந்து துயரம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story