முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு ஜாமீன்


முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு ஜாமீன்
x

சட்டவிரோதமாக அரசு நிலத்தை விடுவித்த வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு ஜாமீன் கிடைத்தது.

பெங்களூரு


கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கடந்த 2006-ம் ஆண்டு பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக இருந்தார். அப்போது பெங்களூரு பெல்லந்தூர் தேவரபீசனஹள்ளி, கரியம்மன் அக்ரஹாரா, அமானி பெல்லந்துர் பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க கர்நாடக அரசு 434 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.


இதில், பெல்லந்தூர் தேவரபீசனஹள்ளியில் அரசு கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 15 ஏக்கரை எடியூரப்பா சட்டவிரோதமாக விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வாசுதேவ் ரெட்டி என்பவர் எடியூரப்பா மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


எடியூரப்பா மீதான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் எடியூரப்பா கோர்ட்டில் ஆஜரானார். அப்போது எடியூரப்பா சார்பில் ஆஜரான வக்கீல், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். பின்னர் இவ்வழக்கில் எடியூரப்பாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story