அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' வழங்காத காங்கிரஸ் - மாயாவதி கடும் தாக்கு


அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ் - மாயாவதி கடும் தாக்கு
x

அம்பேத்கர் ஆதரவாளர்கள் காங்கிரசை மன்னிக்க மாட்டார்கள் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சி, பிரயாக்ராஜில் 'அரசியல் சாசன கவுரவ மாநாடு' நடத்துகிறது. ஆனால், அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கு அவரது வாழ்நாளிலும், அவரது மறைவுக்கு பிறகும் காங்கிரஸ் கட்சி 'பாரத ரத்னா' விருது வழங்கவில்லை. அதனால் அம்பேத்கர் ஆதரவாளர்கள் காங்கிரசை மன்னிக்க மாட்டார்கள்.

அம்பேத்கர் இயக்கத்துக்கு உத்வேகம் அளித்த கன்சிராம் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி ஒருதடவை கூட துக்கம் அனுசரித்தது இ்ல்லை. அச்சமயத்தில் ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சியும் துக்கம் அனுசரிக்கவில்லை. இந்த கட்சிகளின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரு கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரும் காங்கிரஸ் கட்சி, தனது ஆட்சிக்காலத்தில் நடத்தாதது ஏன்?

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story