உல்லாசமாக இருந்த வீடியோவை கணவனிடம் காட்டி பழி தீர்த்த முன்னாள் காதலன்: பதறிய திருமணமான காதலி


உல்லாசமாக இருந்த வீடியோவை கணவனிடம் காட்டி பழி தீர்த்த முன்னாள் காதலன்: பதறிய திருமணமான காதலி
x
தினத்தந்தி 23 Feb 2024 8:01 PM IST (Updated: 23 Feb 2024 8:06 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை திருமணமான பெண்ணின் கணவனிடம் காட்டிய முன்னாள் காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம், பெலகாவியின் கிட்டூர் நகரைச் சேர்ந்தவர் முத்துராஜ்(24). இவர் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த இளம்பெண்ணுடன் முத்துராஜ் உல்லாசமாக இருந்து வந்தார். அப்போது அந்த பெண்ணுக்குத் தெரியாமல் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்துள்ளார்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் வலியுறுத்திய போது முத்துராஜ் மறுத்து விட்டார். அத்துடன் தன்னுடன் பழகிய விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இந்த நிலையில், வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை இளம்பெண் சில நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இதையறிந்த முத்துராஜ், இளம்பெண் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் காட்டி அதிர்ச்சியை கொடுத்தார். இதைத் தட்டிக்கேட்ட இளம்பெண்ணையும், அவரது பெற்றோரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த நிலையில் இளம்பெண்ணை அவரது கணவர் குடும்பத்தினர் வீட்டை விட்டு விரட்டனர்.

இதனால் முத்துராஜின் வீட்டுக்கு முன் இளம்பெண் போராட்டம் நடத்தினார். அத்துடன் முத்துராஜ் குறித்து இளம்பெண்ணும், அவரது பெற்றோரும் புகார் அளிக்கச் சென்ற போது போலீசார் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தன் குடும்பம் பாதிக்கப்பட்டதற்கு முத்துராஜ் உள்ளிட்ட 8 பேர் தான் காரணம் என இளம்பெண் குற்றம் சாட்டிய செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் உஷாரான கிட்டூர் போலீசார், முத்துராஜ் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கிட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story