போபால் விஷவாயு கசிவு: கூடுதல் இழப்பீடு கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு...!


போபால் விஷவாயு கசிவு: கூடுதல் இழப்பீடு கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு...!
x

போபால் விஷவாயு கசிவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

டெல்லி,

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் கடந்த 1984-ம் ஆண்டு விஷவாயு கசிவால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

யூனியன் கார்பைட் இந்தியா லிமிட்டட் என்ற கெமிக்கல் தொழிற்சாலையில் இந்த விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 1989ம் ஆண்டு இழப்பீடு வழங்கப்பட்டது.

யூனியன் கார்பைட் இந்தியா லிமிட்டட் தொழிற்சாலையின் தற்போது உரிமையாளராக டாவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் உள்ளது.

இதனிடையே, போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் கூடுதலாக 7 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில், விஷவாயு கசியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக 7 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க டாவ் கெமிக்கல் நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்தது.


Next Story