பாஜக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது - பிரியங்கா காந்தி


பாஜக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது - பிரியங்கா காந்தி
x

பாஜக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.



பாஜக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது - பிரியங்கா காந்தி

பெங்களூரு,

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்தநிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் கர்நாடகவே நாளுக்கு நாள் பரபரப்பாக காண்கிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கானாபூரில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலளார் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

"பாஜக பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அக்கட்சி ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்றியது இல்லை. ஆனால் காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. மக்களுக்கு துரோகம் செய்யாமல் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தை காங்கிரஸ் எப்போதும் கொண்டுள்ளது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் பணிகளைப் பார்த்துள்ளீர்கள். காங்கிரஸ் மக்களுக்கு நன்மை செய்யும் என்ற நம்பிக்கை உங்கள் அனைவருக்கும் உள்ளது.

பாஜக அனைத்து நிலைகளிலும் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படவில்லை. முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பாஜக முயற்சிக்கிறது. இந்தத் தேர்தல் பொதுமக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். பாஜகவினர் கொள்ளையடித்ததை மக்கள் நன்கு அறிவார்கள். இப்போது மாற்றத்தை விரும்புகிறார்கள்"

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story