குஜராத் சட்டசபை தேர்தல்: மேலும் 12 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மேலும் 12 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
குஜராத் மாநிலத்தில் 182 உறுப்பினர் கொண்ட சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை அடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மேலும் 12 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. காந்திநகர் தெற்கில் இருந்து அல்பேஷ் தாக்கூர் களமிறங்குகிறார்.
2017 தேர்தலின் போது மாநிலத்தில் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தின் முகங்களில் ஒருவரான திரு தாக்கூர், 2019 இல் பாஜகவில் சேர்ந்தார். 2017ல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற அவர், 2019ல் நடந்த இடைத்தேர்தலில் ராதன்பூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.
182 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத் தேர்தலில் 178 இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக இப்போது அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story