ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக சண்டிகரில் பா.ஜ.க.வினர் போராட்டம்


ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக சண்டிகரில் பா.ஜ.க.வினர் போராட்டம்
x

ஆம் ஆத்மி ஆட்சியில் மாநிலத்தில் சட்ட, ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக தலைநகர் சண்டிகரில் நூற்றுக்கணக்கான பா.ஜ.க.வினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம் ஆத்மி ஆட்சியில் மாநிலத்தில் சட்ட, ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், பிரிவினைவாதிகளின் செயல்பாடு அதிகரித்துள்ளதாகவும் பா.ஜ.க.வினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதனைத் தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி பா.ஜ.க.வினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால், அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story