ராகுல்காந்தி உருவாக்கிய புதிய தேசிய பார்வையை சீர்குலைக்க பா.ஜ.க. முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு


ராகுல்காந்தி உருவாக்கிய புதிய தேசிய பார்வையை சீர்குலைக்க பா.ஜ.க. முயற்சி - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி உருவாக்கிய புதிய தேசிய பார்வை புரட்சிகரமானது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ராகுல்காந்தி தனது பாதயாத்திரை மூலம் வலிமையான புதிய தேசிய பார்வையை உருவாக்கி இருந்தார். உண்மையிலேயே அது புரட்சிகரமானது.

ஆனால், நடுக்கத்தில் இருக்கும் பா.ஜனதா, அந்த பார்வையை திசைதிருப்பவும், திருத்தி எழுதவும், சீர்குலைக்கவும் முயன்று வருகிறது. நடுநிலையாக இருக்க வேண்டியவர்களும் இந்த திசைதிருப்புதலில் பங்கேற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், 2013-ம் ஆண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரத்தை 2023-ம் ஆண்டு விலை நிலவரத்துடன் ஒப்பிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் வீட்டு செலவு அதிகரித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story