நடிகர் பிரகாஷ் ராஜ் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்


நடிகர் பிரகாஷ் ராஜ் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்
x

கலபுரகியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடந்தது.

கலபுரகி:

பிரபல கன்னட நடிகரான பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீப காலமாக பா.ஜனதா மற்றும் இந்துக்களுக்கு எதிராக தனது சமூக வலைதள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கலபுரகி டவுனில் உள்ள எஸ்.எம்.பண்டிட் தியேட்டரில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று அங்கு வந்தார். ஆனால் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் கலபுரகிக்கு வரக்கூடாது என்றும், மீறி வந்தால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் என்றும் இந்து விழிப்புணர்வு சேனா அமைப்பினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த எதிர்ப்பை மீறி நேற்று பிரகாஷ் ராஜ் கலபுரகிக்கு வந்தார். இதை கண்டித்து இந்துவிழிப்புணர்வு சேனா அமைப்பினர் கருப்புக்கொடிகளை காட்டி போராட்டம் நடத்தினர். அவர்களை ஜகத் சர்க்கிளில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதையொட்டி நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story