இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் கைது


இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் கைது
x

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் சிறுவனை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் டர்ன் டரன் மாவட்டம் பலொபெட் கிராமம் அருகே பாகிஸ்தான் எல்லையில் நேற்று மாலை 6 மணியளவில் எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, பாகிஸ்தானில் இருந்து ஒரு சிறுவன் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தான். இதை கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர் சிறுவனை கைது செய்தனர். மேலும், சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 16 வயதான அவன் பாகிஸ்தானின் கசூர் பகுதியை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. சிறுவனிடம் ஒரு செல்போன் மற்றும் 100 ரூபாய் (பாகிஸ்தான் ரூபாய்) பணம் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, விசாரணைக்காக ஹர்லரா பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சிறுவன் அழைத்து செல்லப்பட்டான். சிறுவன் பிடிபட்டது தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளிடம் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை, தங்கள் தரப்பில் இருந்து யாரும் மாயமாகவில்லை அது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story