'பிரிக்ஸ்' உச்சி மாநாடு; தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி


பிரிக்ஸ் உச்சி மாநாடு; தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 22 Aug 2023 7:43 AM IST (Updated: 22 Aug 2023 7:46 AM IST)
t-max-icont-min-icon

'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.

பீஜிங்,

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக காணொலி காட்சி மூலம் நடந்து வந்த இந்த மாநாடு, இந்த ஆண்டு நேரடி நிகழ்வாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு, தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்து இருந்தார்.

இதில் சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.மேலும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வங்காளதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் தென் ஆப்ரிக்கா புறப்பட்டு சென்றார்.


Next Story