ஒரே பதிவெண்ணில் இயங்கிய தமிழக சுற்றுலா பஸ்கள் பறிமுதல்


ஒரே பதிவெண்ணில் இயங்கிய தமிழக சுற்றுலா பஸ்கள் பறிமுதல்
x

கோலார் தங்கவயலில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய தமிழக சுற்றுலா பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கோலார் தங்கவயல்:

சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து 2 சுற்றுலா பஸ்களில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சுற்றுலாவாக நேற்று கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார்தங்கவயல் பகுதிக்கு வந்துள்ளனர். அந்த 2 பஸ்களின் பதிவெண்ணும் ஒரே எண் ஆக இருந்தது. அதாவது இரு பஸ்களும் டி.என்.52 ஏ 9369 என்ற பதிவெண்ணுடன் இயங்கியது.

இதுபற்றி கோலார் தங்கவயல் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. உடனே வட்டார போக்குவரத்து துறையினர், அந்த 2 பஸ்களையும் கோலார் தங்கவயல் பெமல் நகர் அருகே தடுத்து நிறுத்தினர். பின்னர் டிரைவர்களிடம் பஸ்களின் ஆவணங்களை வாங்கி பரிசோதித்து பார்த்தனர்.

அப்போது 2 பஸ்களுக்கும் ஒரே வாகன பதிவெண்ணை பயன்படுத்தியதும், இதன் மூலம் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 2 பஸ்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, கோலார் தங்கவயல் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story