தேர்தல் முடிந்தபின் சின்னங்களை கட்சிகள் பயன்படுத்த தடை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு


தேர்தல் முடிந்தபின் சின்னங்களை கட்சிகள் பயன்படுத்த தடை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x

கோப்புப்படம்

தேர்தல் முடிந்தபின் சின்னங்களை கட்சிகள் பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தேர்தல் முடிந்தபின்னர் சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை தடை விதிக்க கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீல் சாரதா திரிபாதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது மனுதாரர் சாரதா திரிபாதி வாதிடுகையில், 'தேர்தல் சின்னம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படுகிறதே தவிர, அரசியல் கட்சிகளுக்கு அல்ல. தேர்தலுக்கு பின்னர் சின்னங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை தடை விதிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'தேர்தல் முறையை பாதிக்கும் வகையில் இந்த மேல்முறையீட்டு மனு இருக்கிறது. கோர்ட்டு நேரத்தை வீணடித்ததற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்கிறோம்' என்று தெரிவித்தனர்.


Next Story